இந்தியா, ஜூலை 19 -- 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மக்களை சந்தித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

இதையடுத்து நாகையை அடுத்த நம்பியார் நகர் மீன்பிடித் துறைமுகத்திற்கு வருகை தந்த எடப்பாடியாருக்கு மீனவர்கள் ஒன்று திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அப்போது மீனவர்கள் மத்தியில் பேசிய இபிஎஸ், "அதிமுக ஆட்சியில் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் அரசின் பங்களிப்பாக ரூ.24 கோடியும் மக்களின் பங்களிப்பாக ரூ.12 கோடி என ரூ.36 கோடியில் சிறு துறைமுகம் வைக்கப்பட்டது. பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் தற்போதைய முதல்வர் பயன்பாட்டிற்கு துறைமுகத்தை திறந்து வைத்துள்ளார். இங்கு பல்வேறு குறைபாடுகள் உள்ளத...