இந்தியா, ஏப்ரல் 15 -- வேப்பம் பூக்கள் கோடைக் காலத்தில் பூத்துக்குலுங்கும். இதை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. இதன் நன்மை குறித்து மருத்துவர் காமராஜ் கூறுகையில், வேப்பம் பூக்களை சேகரித்து, நிழலில் உலர்த்தி, நன்றாக காய்ந்தவுடன் பொடித்து ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள், சரும நோயாளிகள் மற்றும் நாள்பட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். தீராத நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட அவர்களின் நோய்கள் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகள் இந்தப்பொடியை இரண்டு முதல் 4 கிராம் அளவு எடுத்து சூடான தண்ணீரில் கலந்து காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம். உணவுக்கு முன்னர் சாப்பிடுவது நல்லது.

மூட்டு வலி உள்ளவர்களும் இதை சூடான தண்ண...