இந்தியா, ஏப்ரல் 26 -- தொழில் மீது அனைவருக்கும் ஆசை இருக்கும். நல்ல பிசினஸ் செய்து நிறைய சம்பாதிக்கலாம் என்று தோன்றும். பிசினிஸ் மீது ஆசை இருந்தாலும், சிலருக்கு அது அமையும். சிலருக்கு அது அமையாது. பிசினஸ் செய்வதற்கு நுட்பமான அறிவு எந்த அளவிற்கு எந்த அளவிற்கு முக்கியமோ, அதேபோல ஜோதிட ரீதியாக ஜாதக அமைப்பு சரியான முறையில் இருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியம். அந்தவகையில் ஜாதக ரீதியாக யாருக்கு பிசினஸ் ஒத்துவரும் என்பது குறித்து இங்கே காணலாம்.

லக்னத்திற்கு 10-ம் அதிபதி பகை, நீசம் பெற்று வலிமை குறைந்து இருந்தால் நல்ல பிசினஸ் அமையாது எனக் கூறப்படுகிறது.

10-ம் வீட்டில் 6, 8, 12-ம் அதிபதிகள் இருந்தாலோ, பாவ கிரகங்கள் பார்த்தாலோ பிசினஸ் நன்றாக இருக்காது எனக் கூறப்படுகிறது.

7, 10-ம் வீட்டு அதிபதிகள் 6, 8, 12-ல் மறைவு பெற்றாலும் பிசினஸில் நஷ்டம் ஏற...