இந்தியா, மார்ச் 11 -- வேங்கை வயல் வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம், உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜரான காவலர் முரளி ராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்ஷனன் ஆகியோருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.

வேங்கை வயல் வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவில், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட காவலர் முரளி ராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்ஷன் ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. வேங்கை வயல் வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடியாக விசாரணை நடைபெற்றது.

30க்கும் மேற்பட்டவர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட காவலர் ம...