இந்தியா, மே 23 -- உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலைநயம் மற்றும் சிவபெருமான் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மன்னர்கள் மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை நமது நாட்டில் கட்டி வைத்துச் சென்றுள்ளனர் குறிப்பாக சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் என அனைவரும் உலகமே இயக்கம் அளவிற்கு பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய மானாமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் திருக்கோயில். ...