இந்தியா, மார்ச் 24 -- வெள்ளரிக்காய் பச்சடி, தென்னிந்தியாவின் சூப்பர் சுவையான உணவு. இதை பிசிபேலாபாத் என்ற சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். எலுமிச்சை சாதம் உள்ளிட்ட அனைத்து சாதத்துடனும் சேர்த்துக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். நாவின் சுவை அரும்புகளைத் தூண்டும் இந்த பச்சடியை செய்வது எப்படி என்று பாருங்கள். இதை கேரள மக்கள் ஓணம் பண்டிகையின்போது செய்வார்கள்.

* வெள்ளரி - 2

* தயிர் - ஒரு கப்

* தேங்காய் எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* இஞ்சி - கால் இன்ச்

* பெரிய வெங்காயம் - ஒரு கப்

* உப்பு - தேவையான அளவு

* கடுகு - கால் ஸ்பூன்

* வர மிளகாய் - 1

* சின்ன வெங்காயம் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் இஞ்சியை சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து வெங்காயத்தை சேர்த்து சில ...