இந்தியா, மார்ச் 28 -- வெயில் காலத்தில் தண்ணீர் தாகத்தை கட்டுப்படுத்தவே முடியாது. ஆனால் இந்த கடும் கோடையைப் போக்க வெறும் தண்ணீர் குடித்து மட்டும் நம் உடல் சூட்டை தணிக்க முடியாது. அதற்குத் தான் வெள்ளரி, தர்பூசணி போன்றவை நமக்கு கை கொடுக்கின்றன. ஆனால் அவற்றை அப்படியே சாப்பிட்டால் போர் அடித்துவிடும். அதனால் நாம் அதில் பல்வேறு ரெசிபிக்களை செய்து சாப்பிடும்போது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைத்துவிடும் வாய்க்கும் அது ருசியாக இருக்கும். வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் சாதத்தை எப்படி சாப்பிடுவது என்று பாருங்கள். அந்த ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

* வடித்த சாதம் - 2 கப்

* நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

* முந்திரி பருப்பு - 8

* வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - அரை ஸ்...