இந்தியா, ஏப்ரல் 5 -- இந்த கோடையில் சர்க்கரை மற்றும் குளிர்ச்சியான பானங்களை தவிர்த்து, குடலுக்கு உகந்த மாற்று பானங்களை எதிர்பார்த்தீர்கள் என்றால், அதற்கு நீங்கள் இந்த வெள்ளரி கஞ்சியைப் பருகலாம். அது கோடையின் வெப்பத்தை தணிக்க உதவும். பசியை மட்டும் போக்காமல் தாகத்தையும் தீர்த்து, உங்கள் உடலுக்கு தேவையான ப்ரோபயோடிக்குகளைக் கொடுக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இந்த வெள்ளரி கஞ்சி, வெள்ளரி மற்றும் மசாலாக்களைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக இதில் கடுகு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது சில நாட்கள் புளிக்கவைக்கப்படுகிறது. இயற்கையில் புளிக்கவைக்கும்போது, அது கஞ்சிக்கு புளிப்பு மற்றும் சிறிது காரச் சுவையைக் கொடுக்கிறது.

இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று ஊட்டச்சத்து நிபுணர் கவுரி ஆனந்த் கூறுகிறார்.

* வெள்ளரி - 2

* மஞ்சள் கடுகுப் பொ...