இந்தியா, மார்ச் 14 -- வெளிநாட்டில் இருந்து முறையான அனுமதியின்றி நிதி பெற்ற வழக்கில் மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லாவுக்கு கிழமை நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உள்ளது.

1997ஆம் ஆண்டில் கோவையில் நடந்த வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு நிதி உதவி வழங்க கோவை முஸ்லிம் நிவாரண நிதி என்ற அறக்கட்டளையின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறப்பட்டது. 2001 ஆம் ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிகளை பின்பற்றாமல் கோவை முஸ்லிம் நிவாரண நிதியின் கீழ் ரூ.1.54 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நன்கொடைகளை பெற்றதாக ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பின்னர் வருமான வரித்துறையும் விசாரித்தது.

டிசம்பர் 15, 1997 முதல் ஜூன் 6, 2000 வரை,...