இந்தியா, ஏப்ரல் 27 -- 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது பழமையான சொல். மனித வாழ்வுக்கு பொருள் தேடல் என்பது மிகவும் அவசியம். வெளிநாடு சென்று பொருளீட்டுவதில் இன்றைய தலைமுறையினருக்கு அலாதி ஆர்வம்.

"சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா?" என்ற சினிமா பாடல் இந்த இடத்திற்கு பொருத்தமாக இருக்கும். காரணம் உள்நாட்டில் முதலாளியாக இருந்தாலும், வெளிநாட்டில் தொழிலாளியாக சம்பாதித்து வாழ்வதையே பாக்கியமாகவும், பெருமையாகவும் பலர் கருதுகின்றனர். வெளிநாட்டிற்கு செல்வதை நாம் பெருமையாக கருதினாலும், தாய்நாட்டை விட்டு செல்வதை தோஷம், பரதேசவாசம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.

காலம், தேசம், சுருதி, யுக்தி, வர்த்தமானம், ஜாதி, மதம், நிறபேதம் என்ற சொல்லாடல் ஜோதிடத்தில் உண்டு. காலத்திற்கு ஏற்பவும், இ...