இந்தியா, மார்ச் 13 -- இந்தியாவில் இருக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு வெளிநாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு சுற்றுலா செய்ய வேண்டும் என பெரிய கனவு இருக்கும். இது பெரும்பாலானோரின் வாழ்நாள் லட்சியமாக இருக்கும். ஆனால் வருமானம் அந்த அளவிற்கு இருக்காது. நடுத்தர குடும்பங்களின் வருமானத்திற்கு ஏற்றவாறு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். அதற்காகத்தான் தெற்காசியாவில் உள்ள ஒரு நாடான வியட்நாம் ஒரு புதிய கதவுகளைத் திறந்துள்ளது. பல சுற்றுலா பயணிகள் செல்லும் நாடான இங்கு உள்ள விமான நிறுவனம் இந்தியாவில் உள்ள பயணிகளுக்கு அற்புதமான வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அது என்ன மற்றும் முழு விவரத்தை இங்கு காண்போம்.

வியட்நாம் நாட்டினை சேர்ந்த விமான நிறுவனம் வெறும் ரூ. 11க்கு வியட்நாமிற்கு விமானப் பயணம் மேற்கொள்ள சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. ஆனால் இதில் சில விதிமுறை...