இந்தியா, மார்ச் 11 -- காய்கறிகளில் பல நலன்களைக் கொண்டது வெண்டைக்காய் ஆகும். ஆனால் வெண்டைக்காயை நம் வீட்டில் உள்ள சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். வெண்டைக்காயின் வழவழப்பு தன்மையே அதனை பிடிக்காமல் போவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. வெண்டைக்காயை வைத்து குழம்பு செய்யும் போது அதில் இருக்கும் அந்த பிசுபிசுப்பு தன்மையால் சாப்பிடுபவர்கள் தொந்தரவாக உணரலாம். எனவே வெண்டைக்காயை வேண்டாம் எனக் கூறுவார்கள். இந்திய மருத்துவத்தின்படி வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டால் நினைவு சக்தி பெருகும் என ஒரு நம்பிக்கை உண்டு.

ஆனால் வெண்டைக்காயை சாப்பிடுவது என்பது குழந்தைகளுக்கு ஒரு பெரும் பாடாகவே இருந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் அவர்களுக்கு பிடித்தவாறு சுவையான குழம்புகளை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் ...