இந்தியா, மார்ச் 29 -- தமிழகம் மற்றும் கேரளாவில் விருந்துகளில் பரிமாறப்படும் உணவுகளுள் தயிர் பச்சடிக்கு முக்கிய இடம் உண்டு. பச்சடிக்கு தேங்காய் மசாலா அரைத்தும், தயிரை அடித்தும் செய்யப்படுகிறது. இதை காய்கறிகள் சேர்த்தும், சேர்க்காமலும் செய்யலாம். வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பாருங்கள். இதை ஒரு சிலர் வெண்டைக்காய் கிச்சடி என்றும் அழைக்கிறார்கள். இது பச்சடி வகைகளுள் முக்கியமானது. மேலும் இதை வறுத்த வெண்டைக்காயில் இருந்து செய்கிறார்கள்.

* வெண்டைக்காய் - 100 கிராம்

* தயிர் - ஒரு கப்

* மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* தேங்காய்த் துருவல் - அரை கப்

* சீரகம் - அரை ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 1

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

* வர ம...