இந்தியா, ஏப்ரல் 15 -- காரக்குழம்பு பிடிக்காதவர்கள் கூட இந்த வெண்டைக்காய் காரக்குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள். இது சூப்பர் சுவையானதாக இருக்கும். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி இதுபோன்ற குழம்பை செய்யவேண்டும் என்று நினைப்பார்கள். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைளுக்கும் இந்த வெண்டைக்காய் காரக் குழம்பு மிகவும் பிடிக்கும். இதில் கடைசியாக வெல்லம் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் சேர்க்காமலும் விடலாம். வெல்லம் சேர்க்கும்போது, அது புளிப்பு மற்றும் காரச்சுவை என இரண்டையும் பேலன்ஸ் செய்து ஒரு அருமையான சுவையான மாற்றிவிடும். ஆனால் சிலருக்கு வெல்லம் இனிப்புச் சுவையைத் தரும் என்ற எண்ணம் இருக்கும். எனவே கடைசியில் வெல்லம் சேர்ப்பது உங்கள் விருப்பம்தான். எனினும் இந்த வெங்காய மசாலா ...