இந்தியா, மே 17 -- தமிழ் சினிமாவில், நடிகர், உதவி இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் என கலக்கி வருகிறார். அதிரடி ஆக்ஷன், ரோம்- காம், கிராமத்து படங்கள் என அனைத்து ஏரியாவிலும் கலக்கி வந்த விஷால் தற்போது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க| இது எமனுக்கும் எனக்கும் நடக்குற கத.. தெறிக்க தெறிக்க வெளியான தக் லைஃப் ட்ரெயிலர்!

சமீப காலமாக விஷாலின் உடல்நிலை குறித்த அறிவிப்புகள் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது தனது திருமணம் குறித்த அறிவிப்பை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். நடிகர் சங்க கட்டுமான வேலைகள் எல்லாம் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில், அந்த கட்டட பணிகளை விஷால் மேற்பார்வையிட்டு வருகிறார். இந்தக் கட்டடடம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நி...