இந்தியா, மார்ச் 21 -- வீர தீர சூரன் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில், '' சீயான் விக்ரமுடன் நான் இணைந்து பணியாற்றும் நான்காவது படம் இது. 'தெய்வத்திருமகள்', 'தாண்டவம்', 'தங்கலான் ', 'வீரதீர சூரன்' இந்த நான்கு படங்களும் அழுத்தமான கதையம்சம் உள்ள படங்கள். இந்த நான்கு படங்களும் அவருக்கும், எனக்கும் சவாலானதாக இருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றும்போது சவாலாக இருக்கும் என்பதால் சந்தோஷத்துடன் பணியாற்றுவேன்.

மேலும் படிக்க: வீர தீர சூரன் விக்ரமின் சிறந்த படம்.. தயாரிப்பாளர் பெருமை

அருண்குமாருடன் முதல் முறையாக இணைந்திருக்கிறேன். மிகவும் திறமைசாலி. 'மார்க் ஆண்டனி' படத்தில் நானும், எஸ். ஜே. சூர்யாவும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து இந்த படத்திலும் இணைந்திருக்கிறோம். துஷாரா மற்றும் சுராஜ் ஆகியோருட...