இந்தியா, மே 6 -- முதலில் கிரிஸ்டல் ஆமைகள் வீடுகளில் அலங்காரப் பொருளாகத்தான் இருந்தது. இதை இயற்கை கற்களில் செய்தார்கள். ஜேட், ரோஸ் குவார்ட்ஸ், அமெதிஸ்ட் அல்லது கிளியர் குவார்ட்ஸ் போன்ற இயற்கை கிறிஸ்டல்களால் உருவாக்கப்படும். அதன் பெயருக்கு ஏற்றவாறு ஆமை வடிவில் இருக்கும். இதை நீங்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தியானம் செய்யும் அறைகளில் வைக்கும்போது அது உங்களுக்கு வெற்றியைக் கொண்டு வருகிறது.

கிறிஸ்டல் ஆமை, பாதுகாப்பின் அம்சமாகக் கருதப்படுகிறது. இது உங்கள் இல்லத்துக்கு அளவற்ற அதிகப்படியான செல்வத்தைக் கொண்டுவருகிறது. நிலையான மற்றும் பலம் வாய்ந்த என்பதன் அடையாளமாக இந்த ஆமை பொம்மைகள் சில கலாச்சாரங்களில் உள்ளது. பெங்ஃசூயில் நீண்ட வாழ்வு மற்றும் நிலைத்தன்மைக்கு அடையாளமாக விளங்குகிறது. இது உள்புற காயங்களை ஆற்றவும், உங்கள் வீட்டின் செல்வத் தடையை ந...