இந்தியா, மார்ச் 19 -- பொதுவாக வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது நமக்கு ஆரோக்கியத்தை தரும். குறைந்தபட்சம் வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். பலர் தினமும் வீட்டைத் துடைக்கிறார்கள். இவ்வாறு செய்வதால் தரை சுத்தமாக இருப்பது மட்டுமல்லாமல், அதில் பாக்டீரியாக்களும் சேராது. ஒவ்வொரு நாளும் வீட்டைத் துடைப்பது அவசியம். வீட்டின் தரை சுத்தமாக இருந்தால்தான் வீட்டில் உள்ளவர்களும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

தற்போது கோடைகாலம் துவங்க உள்ள நிலையில், வீட்டை ஈக்கள் அதிகமாக ஆக்கிரமிக்க கூடும். ஈக்களில் நமக்கு உடல்நலக் குறைபாட்டை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. ஈக்களால் சுமார் 600 வகையான பாக்டீரியாக்கள் பரவுகின்றன.எனவே ஈக்களில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு நாளும் தரையை சுத்தம் செய்ய வேண்டியது அவசிய...