Chennai, மார்ச் 21 -- கோடைக்காலம் வந்துவிட்டது. வெப்பம் அதிகரிக்கும் போது, குளிர்ந்தவற்றை சாப்பிடவும் குடிக்கவும் நாக்கும் தொண்டையும் ஏங்குகிறது.

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள் போன்றவற்றை வெளியில் வாங்கி வெளியில் சாப்பிடுவது நல்லதல்ல. இவை பணத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இதனால், கோடையில் அதிக மக்களை ஈர்க்கும் குளிர்ச்சியான விஷயங்களில் ஒன்றான ஐஸ்கிரீமை வீட்டில் செய்து பார்க்கலாம். அதை வெளியில் வாங்கி சாப்பிடுவதற்குப் பதிலாக, வீட்டில் எப்போதும் இருக்கும் பொருட்களைக் கொண்டு அந்த ஐஸ்கீரிமை செய்து சாப்பிடுவது நல்லது.

அப்படி வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான வாழைப்பழ ஐஸ்கிரீமை எப்படி செய்வது என்பது குறித்து எளிமையான முறையில் கற்றுக்கொள்வோம்.

வாழைப்பழ ஐஸ்கிரீமை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இந்த ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும். நீங்...