இந்தியா, ஏப்ரல் 13 -- ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் பவனோவிச் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தார். ஹைதராபாத் திரும்பும்போது பவன் தனது மகனை பாதுகாப்பாக வைத்திருக்கும் வீடியோவை ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சிங்கப்பூரில் நடந்த விபத்தில் இருந்து மார்க் சங்கர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த நிலையில் மருத்தவ சிகிச்சைக்கு பின்னர் தன் மகனை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளார் பவன் கல்யாண் , ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்த வந்த போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அவரது மனைவி அன்னா லெஸ்னேவா மற்றும் அவர்களது மகன் மார்க் ஆகியோர் இருந்தனர்.

மேலும் படிக்க | பவன் கல்யாண் மகனின் உடல் நிலை குறித்து...