இந்தியா, மார்ச் 27 -- வீடு சூறையாடப்பட்ட விவகாரத்தில் விரைவில் உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாக பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் தெரிவித்து உள்ளார்.

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர், தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் சிபிசிஐடி பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.

நேற்று தனது வீட்டில் நடந்த தாக்குதல் குறித்து பேசிய சவுக்கு சங்கர், "சிபிசிஐடி போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர், ஆனால் அந்த ஐந்து பேரையும் நேற்று இரவே நீதித்துறை நடுவர் விடுதலை செய்தார்" என்று தெரிவித்தார். எஃப்.ஐ.ஆர். குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த எஃப்.ஐ.ஆர் பார்த்தீர்கள் என்றால், அனைத்துமே ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என் வீட்டில் நட...