இந்தியா, ஜூன் 14 -- மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், சம்பவ இடத்தை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் தமிழக அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தை பார்வையிட சென்றபோது இன்று கைது செய்யப்பட்டார். நேற்று இரவு முகமூடி அணிந்த நபர்களால் அந்த காவல் நிலையம் தாக்கப்பட்டதை அடுத்து, அங்கு சென்ற உதயகுமாரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை நடந்தது.

வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில், நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்த சிலர் புகுந்தனர். அவர்கள், "எங்கள் உறவினர்களை ஏன் கைது செய்தீர்கள்?" என கே...