இந்தியா, ஜூன் 14 -- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அந்தக் காவல் நிலையத்தை பார்வையிட சென்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதாரண மக்களைத் தாண்டி, தற்போது காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் தான...