இந்தியா, மார்ச் 23 -- நாம் விளக்கெண்ணெயை அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை. ஆனால் இந்த விளக்கெண்ணெயில்தான் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக திருச்சி நலமுடன் மரச்செக்கு ஆலையின் உரிமையாளர் புவனேஸ்வரி கூறுகிறார். நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெயை உபயோகிக்கும் அளவுக்கு மக்கள் விளக்கெண்ணெயை பரவலாகப் பயன்படுத்துவது இல்லை. ஆனால் அதை நாம் சாப்பிடவும், வெளியில் தடவிக்கொள்ளவும் என இரண்டு வழிகளிலும் பயன்படுத்தி எண்ணற்ற நன்மைகளை பெற முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறிய விவரங்கள்

செக்கில் ஆட்டும் எண்ணெயில் ஆமணக்கு விதையிலுள்ள நஞ்சு வெளியாகாது. பாரம்பரிய முறையில் காய்ச்சி வடிப்பதால் மட்டுமே உட்கொள்ள இயலும். ஆகவே தான் பாரம்பரிய முறையில் காய்ச்சி வடிகட்டி தயாரிக்கிறோம்.

விளக்கெண்ணெய் 1 பங்கும் சுத்த தேங்காய் எண்ணெய் 3...