இந்தியா, மார்ச் 3 -- விருத்தகிரீஸ்வரர்: தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக போரிட்டு வந்த மன்னர்கள், போட்டி போட்டுக்கொண்டு சிவபெருமான் மீது பக்தி கொண்டு மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.

எத்தனையோ சிறப்பு மிகுந்த சிவபெருமான் கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்தான் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்.

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் விருத்தகிரீஸ்வரர் எனவும் தாயார் விருதாம்பிகை என்ற திருநாமத்தில் அழைக்கப்பட்டு வருகின்றனர். சிவபெருமான் இந்த திருக்கோயிலில் சுயம்ப...