இந்தியா, மே 5 -- குண்டாறு-தெற்காறு இணையும் இடத்தில் தடுப்பணை கோரி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் முதலமைச்சரின் தனிபிரிவுக்கு கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

மேலும் படிக்க:- 'பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா?' ஆர்.எஸ்.பாரதி கேள்வி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், P.புதுப்பட்டி கிராமத்தில் குண்டாறு மற்றும் தெற்காறு இணையும் இடத்தில் புதிய தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் 30 ஆண்டு கால கோரிக்கையை முன்வைத்து, காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது. இந்த மனுவில், தடுப்பணை அமைப்பதால் 15,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் ஆதாரமும், நிலத்தடி நீர் மட்டமும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருது...