இந்தியா, மே 3 -- நிஜ வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பது வழக்கம். அந்த வகையில் தமிழ் மற்றும் இந்தியில் பல பயோபிக் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்தியா கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை படமாக்கப் படுவதாகவும், அதில் தமிழ் நடிகர் சிம்பு நடிக்கலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை இது நடந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | சிம்புவின் அச்சம் என்பது மடமையடா முதல் ஹரிஷின் பியார் பிரேமா காதல் வரை! இன்று டிவியில் வரப்போகும் படங்களின் லிஸ்ட்!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மானான விராட் கோலி, STR நடித்த பத்து தல படத்தில் இடம்பெற்ற "நீ சிங்கம் தான்" என்ற பாடலை த...