இந்தியா, பிப்ரவரி 28 -- இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள ஒற்றுமைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டால் அது பிரியாணி ஏனென்றால் இந்தியாவின் பல பகுதிகளிலும் பலவிதமான பிரியாணிகள் செய்யப்படுகின்றன. இந்தியாவில் இயங்கி வரும் ஆன்லைன் புட் டெலிவரி ஆப்ளில் கூட பிரியாணியே பிரதான உணவாக ஆர்டர் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு பிரியாணியும் அதன் சுவைக்காக பிரபலமாக உள்ளது. ஹைதராபாத் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி என பல பிரியாணி வகைகள் இந்தியாவில் உள்ளன. மேலும் மாறுபட்ட சூழ்நிலையில் உணவிலும் பல மாறுபாடுகள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமாக பிரியாணியில் பல வகையான பிரியாணிகள் வந்துவிட்டன அதில் ஒன்றுதான் சேமியா வெஜிடபிள் பிரியாணி. இது சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும் புதிய அனுபவத்தையும் கொடுக்கும். இந்த சேமியா வெஜிடபிள் பிரியாண...