இந்தியா, ஏப்ரல் 18 -- தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில், விண்வெளி தொழில் கொள்கையா? அல்லது கோபாலபுர குடும்ப தொழில் கொள்கையா என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு அரசு, விண்வெளி துறையில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025-க்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் படிக்க:- பொன்முடி Vs செங்கோட்டையன்: 'பொன்முடி பேச்சால் 234 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெறும்!' செங்கோட்டையன் நம்பிக்கை!

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அமைச்சரவையில் எட...