இந்தியா, மே 4 -- கோவையில் நடந்த விஜய் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் 'TVK.! TVK.!' என்று கத்தியது என் காதில் 'டீ விக்க.! டீ விக்க.!' என்று கேட்டதாக திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி கிண்டல் அடித்து உள்ளார்.

மேலும் படிக்க:- 'விஜய்யின் தவெக கட்சி உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?' நயினார் நாகேந்திரன் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவையில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை கிண்டலடித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லியோனி தனது பேச்சில், தவெகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஒருவர் "TVK, TVK" என்று கூறியதை, "டீ விற்க, டீ விற்க" என்று தான் கேட்டதா...