இந்தியா, மே 1 -- ஜனநாயகன் படப்பிடிப்புக்கு கொடைக்கானல் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வரும் என்னை யாரும் பின் தொடர வேண்டாம் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் கூறி இருந்த நிலையில், அவரது பேச்சை கேட்காமல் ஏராளமான ரசிகர்கள் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர்.

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், 'ஜனநாயகன்' படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையத்தில் இருந்து கொடைக்கானல் நோக்கி சாலை மார்க்கமாக பயணித்தார். அவரை வரவேற்க ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தில் அதிகாலை முதல் கூடியிருந்தனர்.

இதனால், விமான நிலையப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினரால் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியத சூழல் நிலவியது.

மேலும் படிக்க:- Exclusive: காஷ்மீர் தாக்குதல் முதல் அறநிலையத்துறை வரை! நித்யானந்தா ...