இந்தியா, ஜூன் 21 -- தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது பிறந்தநாள் விழா நாளை (ஜூன் 22) கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அவரது தொண்டர்களும், ரசிகர்களும் அதனை வெகுவிமரிசையாக கொண்டாட காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

பல்வேறு திரையரங்குகளில் அவரது நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்று ஓடிடி ப்ளே ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் திரைப்படங்களை பார்க்கலாம்.

விஜயை அதிரடி கதாநாயகனாக உருமாற்றிய திரைப்படம் கில்லி. விஜயின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்தப்படத்தில் விஜய் கபடி வீரர் சரவணவேலு கதாபாத்திரத்தில் நடித்தார்.

விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்த நிலையில் வில்லனாக பிரகாஷ் ராஜ் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தார்....