இந்தியா, ஜூலை 18 -- வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி என்ற சூழல் உருவாகி உள்ளது. இதற்கிடையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். இதேபோல், 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

இந்தநிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு...