இந்தியா, மார்ச் 24 -- பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் கடந்த வருடம் தாங்கள் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதன் பின்னர் அது தொடர்பான கேள்விகள் ஜிவி பிரகாஷ்குமாரிடம் வைக்கப்பட்டது. அதனை அவர் மிகவும் நாகரீகமாக கையாண்டார். அதன் பின்னர் இருவரையும் சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகள், பல்வேறு நபர்கள் சார்பில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனாலும், எதுவும் வொர்க் அவுட் ஆக வில்லை என்றே தெரிகிறது.

மேலும் படிக்க | வீர தீர சூரன் படத்தோட பிஜிஎம், மியூசிக் எப்படி இருக்கும் தெரியுமா? அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!

இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் குமாரும், சைந்தவியும் இன்றைய தினம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்துக் கூறி மனு தாக்கல் செய்திருக்கின்றனர...