இந்தியா, ஜூன் 14 -- நீர்வரத்து குறைந்ததன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக தடை செய்யப்பட்டிருந்த குற்றால அருவிகளில் குளிக்கும் அனுமதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்ததால், பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், வார இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்த மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்திருந்தது. இதனால், பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அருவிகளுக்கு அருகே செல்லாமல் தடுக்கப...