இந்தியா, ஏப்ரல் 2 -- தமிழ்நாட்டில் இருக்கும் தென் மாவட்டங்களில் தெருவோர கடைகளில் பணியாரம், அப்பம், புட்டு உட்பட பல இனிப்பு உணவுகள் அதிகமாக விற்கப்படுவதை காணலாம். குறிப்பாக மதுரை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும் இது மாதிரியான உணவுகள் பிரபலமாக உள்ளன. பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகள் சாப்பிடும் வகையில் இது மாலை நேரங்களில் விற்பனையாகிறது. அப்பகுதிகளில் இருந்தவர்களுக்கு இது நிச்சயமாக தெரியும். அப்படி தென் மாவட்ட தெருவோர கடைகளில் விற்கப்படும் உணவுகளில் ஒன்றாக போளி இருந்து வருகிறது. இது கோதுமை மாவு மற்றும் வெல்லம் போன்ற பொருட்களினால் செய்யப்படுவதால் குறைந்த விலையிலேயே கிடைக்கும். இதனை ருசிக்காமல் இருந்தால் கவலைப்பட வேண்டாம். இன்று வீட்டிலயே இந்த போளியை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

மேலும் பட...