இந்தியா, மார்ச் 26 -- இந்தியாவில் இருக்கும் பல வகையான உணவுகள் உலக அளவில் மிகவும் பிரபலமான உணவுகளாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் செய்யப்படும் இனிப்பு உணவுகளுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த அளவிற்கு இந்தியாவின் இனிப்பு உணவுகள் விசேஷ நிகழ்வுகளின் போதும் கொண்டாட்டங்களின் போதும் சிறப்பாக கருதப்படுகிறது. நமது வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் என்றாலும் விசேஷ நிகழ்வுகள் என்றாலும் அதில் நிச்சயமாக ஒரு இனிப்பு உணவு இடம்பெறும். இந்தியாவில் செய்யப்படும் இனிப்பு உணவுகள் மற்ற நாடுகளை விட தனித்துவமான செய்முறையில் தயாரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட இந்தியாவில் பிரபலமான இனிப்புகளில் ஒன்றான மைசூர் பாக் ஒரு சுவையான இனிப்பாகும். இதனை சாப்பிடும் போது மிகவும் தித்திப்பாக இருக்கும். இனி மைசூர்பாக் சாப்பிட வேண்டும் என்றால் கடைகளுக்கு செல்ல வ...