இந்தியா, மார்ச் 2 -- பனிக்காலம் முழுவதுமாக முடிவடைந்து கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் வெப்பநிலையானது அதிகரித்து வருகிறது. தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகள் மழை பெய்து வந்தாலும், அநேக இடங்களில் வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது.

இதையடுத்து மார்ச் 3ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: கொளுத்தும் கோடை வெயிலில் தவிர்க்க கூடிய உணவுகள்

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் - மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவ...