இந்தியா, ஏப்ரல் 18 -- ஏகாதசி என்பது மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய மிக முக்கியமான விரத நாளாகும். எத்தனை விரதங்கள் இருந்தாலும் அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது என்பார்கள். சிறப்பு வாய்ந்த இந்த விரதம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை ஏகாதசி வருவதுண்டு. அப்படி சித்திரை மாதத்தில் வரக் கூடிய ஏகாதசிக்கு வருத்தினி ஏகாதசி என்று பெயர்.

வருத்தினி ஏகாதசி என்பது இந்து மதத்தின் ஒரு சிறப்பு நாளாகும். இந்த நாள் ஸ்ரீமன் நாராயணனின் வராஹ அவதார வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் விரதம் இருப்பது வாழ்வில் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் அமைதியைத் தரும் என்று நம்பப்படுகிறது. மன அல்லது உடல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த விரதம் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

வருத்தினி என்றால் பாதுகாப்பது என்று பெ...