இந்தியா, ஏப்ரல் 16 -- திருநெல்வேலியில் இயங்கி வரும் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங்கின் மகள் ஸ்ரீகனிஷ்கா சிங் நெல்லை மாநக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று நேரில் வந்து வரதட்சணைப் புகார் அளித்துள்ளார். மேலும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் வரதட்சணைப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

திருமணமாகி 40 நாள்களிலேயே வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றித் தரும்படி, கணவர் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக ஸ்ரீகனிஷ்கா அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மருமகன் வேறு ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து தனது மகளை துன்புறுத்தியதாகவும், தனது மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் இருட்டுக்கடையை வரதட்சணையாக தரவேண்டும் எனவும் மருமகன் பல்ராம் சிங் மிரட்டுவதாகவு...