இந்தியா, ஏப்ரல் 19 -- பாமக உட்கட்சி பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்க வேண்டாம் என பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்து உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) உட்கட்சி பிரச்சனைகள் குறித்து எழுந்த கேள்விகளுக்கு கட்சியின் பொருளாளர் திலகபாமா தனது பேட்டியில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சித்திரை திருநாள் மாநாடு மற்றும் இளைஞர் பெருவிழாவை முன்னிட்டு கட்சி தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், தனிமனித விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்புவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

திலகபாமா தனது பேட்டியில், "பாமக தற்போது சித்திரை திருநாள் மாநாட்டை திறம்பட நடத்துவதற்கு அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு இளைஞர்களும், பெண்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்,...