இந்தியா, மே 15 -- கோடை காலம் துவங்கி இருப்பதால் மாங்காய் சீசனும் வந்துவிட்டது. பொதுவாக மாங்காயை வைத்து மாங்காய் ஊறுகாய், மாங்காய் சாம்பார், மாங்காய் வத்தல், மாங்காய் பச்சடி, வடு மாங்காய் என பல சுவைகளில் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் என்றால், இந்த முறை மாங்காயை கொண்டு அசத்தலான மாங்காய் ரசம் செய்து பாருங்கள். இந்த மாங்காய் ரசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இந்த ரசத்திற்கு புளி, தக்காளி என்று எதுவுமே தேவையில்லை. இதனால் இந்த ரசத்தை கோடை சீசனில் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம் போன்ற விதவிதமான ரசம் வச்சு சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், இந்த மாங்காய் சீசன்லையே இந்த மாதிரி மாங்காய் ரசம் வச்சு சாப்பிட்டு பாருங்க. இப்...