இந்தியா, மார்ச் 28 -- வீட்டிலேயே சுவையான ஐயங்கார் வீட்டு ஸ்டைல் வத்தல் குழம்பு பேஸ்ட்டை செய்து வைத்துக்கொள்ளலாம். நீங்கள் இதை பயன்படுத்தி விரைவாக சமையலை முடித்துவிடலாம். ஃபிரிட்ஜில் வைத்து நீண்ட நாட்கள் உபயோகிக்கலாம். இது புளிப்பு, காரம் கலந்த சுவையான தென்னிந்திய உணவாகும். இதைச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

* புளி - எலுமிச்சை அளவு

(சூடான தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும், கரைத்துக்கொள்ளவேண்டும்)

* நெய் - ஒரு ஸ்பூன்

* சுண்டைக்காய் வத்தல் - 3 டேபிள் ஸ்பூன்

* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* கடலை பருப்பு - 2 ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்

* பொடித்த வெல்லம் - ஒரு ஸ்பூன்

* நல்லெண்ணெய் - ஒரு ஸ்பூன்

* வரமல்லி விதைகள் - 2 ...