இந்தியா, மார்ச் 26 -- டாப் 10 தமிழ் நியூஸ் 26.03.2025: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

சென்னையில் நேற்று காலை தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிய சல்மான் என்பவர், நேற்று மாலை நெல்லூர் அருகே சுற்றி வளைத்து பிடிக்கப்பட்ட நிலையில், சென்னை அழைத்துவந்து போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் பிடிபட்ட நிலையில், இதில் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன், தப்பி ஓடும் முயற்சியில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையில் கடந்த 2003ம் ஆண்டு நகைக் கடை ஊழியரிடம் 2 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடித்த சம்பவத்தில், 22 ஆண்டுகளாக நடந்த வழக்கில் மாவட்ட முதன்மை சார்பு ந...