இந்தியா, ஏப்ரல் 14 -- இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் முக்கிய விரதங்களில் ஒன்று தான் வட சாவித்திரி விரதம். ஒவ்வொரு ஆண்டும் திருமணமான பெண்கள் இதை கடைபிடிக்கிறார்கள். பஞ்சாங்கத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் கோடைகால பெளர்ணமி அமாவாசை திதியில் வட சாவித்திரி வழிபாட்டு விரதம் அனுஷ்டிக்கப்படும்.

வடம் என்றால் விழுது என்று பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில் தான் இருக்கிறது. அதுப்போல ஒரு பெண்ணின் பலம் அவளின் கணவனை பொருத்துதான் இருக்கிறது. நல்ல கணவன் அமையவும், மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும்.

வட சாவித்திரி விரதம் திருமணமான பெண்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணமான பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்தால், எப்போதும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிற...