இந்தியா, மார்ச் 9 -- வடிவுக்கரசி: விஜய் டிவியில் இன்றைய தினம் (09 -03-2025) ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 -ல் வடிவுக்கரசியும், நளினியும் விருந்தினர்களாக வரவழைக்கப்பட்டிருந்தனர். கடவுள் முருகனை மையப்படுத்தி நிகழ்ச்சி சென்றதால், விருந்தினர்களும் முருகனுக்கும் தங்களுக்கும் இடையே நடந்த உணர்ச்சிகரமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் நடிகை வடிவுக்கரசி பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.

அவர் பேசும் போது, 'ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நான் ஒவ்வொரு தெய்வத்தை பிடித்துக்கொள்வேன். இந்த நிலையில், திடீரென்று சிலர் நீங்கள் முருகனை வழிபட்டு பாருங்கள் என்றனர். ஆனால், நான் அவர்களிடம், முருகன் மிகவும் சின்னப்பையன்.. ஒரு மாம்பழத்தை கொடுக்க வில்லை என்பதற்காக கோபப்பட்டு போனவர் அவர்.. அவரிடம் நம் கஷ்டத்தை சொன்னால் அவருக்கு அது புரியுமா? எனக்...