இந்தியா, மார்ச் 2 -- Chandramoulishvarar: நமது தமிழ்நாட்டில் எத்தனையோ சிறப்பு மிகுந்த சிவபெருமான் கோயில்கள் அமைந்துள்ளன. எங்க திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை அவர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர். அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.

அதன் காரணமாகவே நமது தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் இருந்து வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி பல நூறு ஆண்டுகள் கடந்து...