இந்தியா, ஏப்ரல் 2 -- வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 மற்றும் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா என்பது குறித்து அனைத்துக் கட்சிகளும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் முக்கிய கூட்டணி கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வக்பு மசோதாவில் ஒரு முக்கிய மாற்றத்தை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை, அனுமதிக்கும் மசோதா குறித்து தெலுங்கு தேசம் கட்சி கேள்வி எழுப்பும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவம் அந்தந்த மாநிலங்களின் விருப்பப்படி விடப்பட வேண்டு...