இந்தியா, ஜூன் 11 -- தமிழில் கார்த்தி ஹீரோவாக நடித்த கைதி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்தப் படத்தில் கார்த்தியின் நடிப்பு இந்திய ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. இந்தப் படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திற்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. இப்போது, படத்தின் இரண்டாம் பாகமான கைதி 2 தயாராக உள்ளதாகவும் அதில் நடிகை அனுஷ்கா நடிக்கப் போகிறார் என்றும் பரபரப்பான தகவல்கள் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க| லோகேஷ் கனகராஜோ.. ஷங்கரோ கிடையாது.. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் யார் தெரியுமா?

தெலுங்கு மக்களின் ஆஸ்தான நாயகிகளின் பட்டியலில் எப்போதும் இணைந்தே இருப்பவர் நடிகை அனுஷ்கா. அவர் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என திரையுலக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்த...