இந்தியா, மே 22 -- லெட்யூஸில் உள்ள நற்குணங்கள் என்னவென்று பாருங்கள். லெட்யூசில் எண்ணற்ற வகைகள் உள்ளன. ரொமைன், ஐஸ்பெர்க்,ள பட்டர்ஹெட், லீஃப், பட்டாவியா என எண்ணற்ற வகை லெட்யூஸ்கள் உள்ளன. இவை உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கின்றன. உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் உணவுகளுள் லெட்யூசும் ஒன்று. இதை குட்டி குட்டியாக வெட்டி, சாலட்கள், சாண்ட்விச்களில் சேர்த்து சாப்பிடலாம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்தக்கள் உள்ளது. இது உங்கள் சரிவிகித உணவின் அங்கமாகும். லெட்யூசிள் நன்மைகள் என்னவென்று பாருங்கள்.

குறைந்த கலோரிகள் கொண்டது மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே உள்ளது. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய மினரல்கள் கொண்டது. கலோரிகள் குறைவானது. இதை நீங்கள் எந்த உணவில் வேண்டுமானாலும் சேர்த்...